×

மேல்மருவத்தூர் ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில், ஆன்மீக குரு பங்காரு அடிகளாரின் தந்தை கோபாலின் 24ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆதிபராசக்தி சித்தர் பீடம் அருகில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கத் தலைவர் கோ.ப.அன்பழகன், ஆதிபராசக்தி ஆன்மீக இளைஞர் அணி தலைவர் செந்தில்குமார், மேல்மருவத்தூர் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் அகத்தியன் ஆகியோர் இயக்கத் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று மறைந்த கோபாலின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து, முன்னாள் எம்பி துரை, சித்தாமூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஏழுமலை உள்ளிட்ட ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கம் தொண்டர்கள், பொறுப்பாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, ஏழை எளியோருக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரம், மிதிவண்டி, சில்வர் பாத்திரம், பீரோ, பள்ளி மாணவர்களுக்கு பேக், ஸ்லேட், பென்சில் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கத் தலைவர் கோ.ப.அன்பழகன் வழங்கினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆன்மீக மக்கள் தொண்டு இயக்க நிர்வாகிகள் மதுரை மாவட்ட நிர்வாகி சரளா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

The post மேல்மருவத்தூர் ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Melluruvathur Spiritual People's Charities Movement ,Madurandakam ,Gopal ,Bankaru Aottar ,Melmaruvathur Spiritual ,Population Movement ,Dinakaran ,
× RELATED அரையப்பாக்கத்தில் அடிக்கடி கேட்...