×

பிள்ளையார்பாளையம் பகுதியில் பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: பிள்ளையார்பாளையத்தில் பல லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பழுதடைந்துள்ளது. இதனை, மீண்டும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் நகர மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் நோக்கத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு பிள்ளையார்பாளையம் பகுதியில் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இது, கடந்த 2013-14ம் நிதியாண்டில் சமூக நல பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் புதுடெல்லி இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனம் ரூ.85 லட்சம் திட்ட மதிப்பீட்டில் இந்தகுடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்தது.

இதன்மூலம் பிள்ளையார்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சுமார் 1 ஆண்டு காலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வந்தநிலையில், தற்போது இயந்திரங்கள் பழுதானதால் மீண்டும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பரவலாக அனைத்து பகுதிகளிலும் குடிநீர் மாசடைந்த நிலையில் பொதுமக்கள் கேன் தண்ணீர் எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சமூக நல பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பிள்ளையார்பாளையம் பகுதியில் பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Pilliyarpalayam ,Kanchipuram ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு...