×

பாமக பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பாமக பிரமுகர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். செங்கல்பட்டை சேர்ந்தவர் நாகராஜ் (46). இவர் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாமக நகர செயலாளராக பதவி வகித்தார். பூ வியாபாரம் செய்து வந்த இவர் கடந்த 9ம் தேதி இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் திடீரென நாகராஜை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

அவர்களிடம் இருந்து நாகராஜ் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அவரை மர்ம கும்பல் சுற்றி வளைத்து வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றனர். இது குறித்து செங்கல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு, சின்னநத்தம் பகுதியைச் சேர்ந்த அஜய் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் ஒருவர் தப்பிக்க முயன்ற போது போலீசார் சுட்டு பிடித்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த செங்கல்பட்டு, சின்னநத்தம் பகுதியைச் சேர்ந்த அன்வர் உசேன் (30) என்பவர் விழுப்புரம் 2வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அகிலா முன்பு நேற்று சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதன் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post பாமக பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண் appeared first on Dinakaran.

Tags : Charan ,Bamakha ,Villupuram ,Chengalpattu ,Bamaka ,Villupuram court ,
× RELATED உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால...