×

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட பார்க்கிங் திறப்பு: நிர்வாகம் தகவல்

சென்னை: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட 2 மற்றும் 4 சக்கர வாகன நிறுத்துமிடம், திட்ட இயக்குநர் அர்ச்சுனன் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘‘ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடம் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு சீரமைப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் வாகனம் நிறுத்தம் வசதிக்காக திறக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தும் இடத்தில் 1500 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 180 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும். மெட்ரோ ரயில் பயணிகள் இனி இந்த வாகன நிறுத்தும் இடத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். பயணிகளின் வசதிகாக ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதலாக இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி செய்யப்பட்டு வெகு விரைவில் திறக்கப்படவுள்ளது,’’ என்றார்.
நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் சதீஷ்பிரபு, மேலாளர்கள் லட்சுமி (வருவாய்), அல்தாப் ஹுசைன் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

The post ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட பார்க்கிங் திறப்பு: நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Alandur Metro Station ,Chennai ,Archunan… ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...