
சென்னை: அதிகளவில் ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இனி சனிக்கிழமைகளிலும் செயல்பட வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அனைத்து மண்டல அதிகாரிகளுக்கு போக்குவரத்துறை ஆணையர் சண்முகசுந்தரம் அனுப்பியுள்ள கடிதம்: 2004ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின் படி அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதன்படி, சென்னை நகரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், மீனம்பாக்கம் மற்றும் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு சனிக்கிழமையன்று பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது ஓட்டுநர் உரிமங்களுக்கு விண்ணப்பித்து காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் அதிகளவில் நிலுவையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிகிழமைகளிளும் இயங்க வேண்டும். முன்னதாக அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்களுக்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து தரப்பு பொதுமக்களும் இந்த சேவையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கடித்தத்தில் கூறப்பட்டுள்ளது.
The post டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பம் நிலுவை விவகாரம் சென்னையில் சனிக்கிழமைகளிலும் ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்பட வேண்டும்: போக்குவரத்துத்துறை உத்தரவு appeared first on Dinakaran.