×

101 வயது மூதாட்டியிடம் 8 சவரன் நகை அபேஸ் மர்ம ஆசாமிக்கு வலை செங்கம் அருகே வீட்டில் தனியாக இருந்த

செங்கம், ஜூலை 14: செங்கம் அருகே வீட்டில் தனியாக இருந்த 101 வயது மூதாட்டியிடம் 8 சவரன் நகையை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கரியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையம்மாள்(101). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இதையறிந்த மர்ம ஆசாமி ஒருவர் நேற்று முன்தினம் மாலை மூதாட்டி வீட்டிற்கு சென்று, தன்னை உறவினர் என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். பின்னர், நைசாக பேச்சு கொடுத்த மர்ம ஆசாமி மூதாட்டியிடம் சுமார் 2 மணி நேரம் பேசி கொண்டிருந்தாராம். அப்போது, வீட்டில் வைத்திருந்த 8 சவரன் நகைகளை திருடிக்கொண்டு சென்றுள்ளார்.

வழக்கமாக பச்சையம்மாள் தூங்க செல்வதற்கு முன்பு தன்னுடைய நகைகளை சரிபார்த்துவிட்டு செல்வாராம். அதேபோல், இரவு சரிபார்த்தபோது நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த நகைகளை வீட்டிற்கு வந்த மர்ம ஆசாமி திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பச்சையம்மாள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் செங்கம் போலீசில் புகார் ெசய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடிவருகிறார். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த 101 வயது மூதாட்டியிடம் நகைகளை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

The post 101 வயது மூதாட்டியிடம் 8 சவரன் நகை அபேஸ் மர்ம ஆசாமிக்கு வலை செங்கம் அருகே வீட்டில் தனியாக இருந்த appeared first on Dinakaran.

Tags : Velab Sengam ,Sengam ,Abes Marma Asami ,Dinakaran ,
× RELATED வேட்டைக்கு சென்றபோது நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் வாலிபர் சாவு