×

தற்காலிக ஊழியர் லஞ்சம் வாங்கிய வீடியோ தொடர்பாக பதிவுத்துறை டிஐஜி விசாரணை வாணியம்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில்

வேலூர், ஜூலை 14: வாணியம்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் தற்காலிக பணியாளர் லஞ்சம் வாங்கிய வீடியோ தொடர்பாக பதிவுத்துறை டிஐஜி விசாரணை நடத்தி வருகிறார். மேலும், இதுதொடர்பாக அறிக்கை தர மாவட்ட பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசினர் தோட்டம் பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் கிருஷ்ணகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற மணி என்பவர் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பத்திரப்பதிவு தொடர்பாக சார்பதிவாளர் அலுலகத்திற்கு வருகிற பணியாளர்களிடம் மணி லஞ்சம் பெறுவதாக வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து, வேலூர் மண்டல பதிவுத்துறை டிஐஜி சுதாமல்யா, வாணியம்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை தொடங்கி உள்ளார். மேலும், வாணியம்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட பதிவாளர் பிரகாஷ் விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தர டிஐஜி உத்தரவிட்டுள்ளதாக பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தற்காலிக ஊழியர் லஞ்சம் வாங்கிய வீடியோ தொடர்பாக பதிவுத்துறை டிஐஜி விசாரணை வாணியம்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் appeared first on Dinakaran.

Tags : Registry Department ,DIG ,Vanyambadi Press Office ,Vellore ,Vaniyambadi Press Office ,Registry DIG ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார்...