×

மாஜி அமைச்சர் அன்பழகன் ரூ.45 கோடி சொத்து குவிப்பு வழக்கு விரைவில் விசாரணை: முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம்

தர்மபுரி: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு, முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு நேற்று மாற்றப்பட்டது. தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் கெரகோடஅள்ளியைச் சேர்ந்தவர் கே.பி.அன்பழகன். பாலக்கோடு தொகுதி அதிமுக எம்எல்ஏவான இவர், கடந்த 2016-2021ல் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.45.20 கோடிக்கு சொத்து குவித்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் உறவினர்கள் உள்பட 11 பேர் மீது, தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த மே 22ம்தேதி 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை, தர்மபுரி மாவட்ட தலைமை குற்றவியில் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு நேற்று மாற்றப்பட்டது. தொடர்ந்து நீதிமன்றத்தின் மூலம், சம்மன் வழங்கப்பட்டு விசாரணை விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாஜி அமைச்சர் அன்பழகன் ரூ.45 கோடி சொத்து குவிப்பு வழக்கு விரைவில் விசாரணை: முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Maji Minister ,Andabhaghan ,Darmapuri ,Former Minister ,K. GP ,Andraghan ,Court of Primary Session ,Anbhagan ,session ,
× RELATED மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அளித்த...