×
Saravana Stores

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து கால்வாய்களையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: நீர்வளத்துறை அமைச்சர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அரசினால் ஒதுக்கப்பட்ட ரூ.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் நடைபெறவுள்ள பணிகள் குறித்து விவாதித்தார். மேலும் இப்பணிகள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் 15.09.2023 முன்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து கால்வாய்களையும் தூர்வாரி, ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யவேண்டும் என உத்தரவிட்டார். மேலும், நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளும் பணிகள் மற்றும் அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத்திட்டப் பணிகள், நீர்வள, நிலவள திட்டப்பணிகள் ஆகியவற்றினை திட்டமிடப்பட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்கவேண்டுமென அறிவுரை வழங்கினார்.

மேலும் கடந்த ஆண்டு நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.434 கோடி அளவில் நடைபெற்று வரும் போரூர் ஏரி உபரிநீர் கால்வாய், அடையாறு ஆற்றினை அகலப்படுத்தும் பணி. கொசஸ்தலையாற்றின் வெள்ளக்கரை அமைக்கும் பணி. சென்னை மாநகரில் அமைந்துள்ள முக்கிய ஏரிகளில் நீர் ஒழுங்கிகள் அமைக்கும் பணிகள். பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி. செம்மஞ்சேரி பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் விவாதித்தார்.

இந்த ஆண்டு சென்னை மற்றும் புறநகர் பகுதியினைச் சார்ந்த கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட தணிகாச்சலம் நகர் கால்வாய் மேம்படுத்தும் பணி, கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், மணப்பாக்கம் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மாதவரம் ரெட்டை ஏரியில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

 

The post சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து கால்வாய்களையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister of Water Resources ,Chennai ,Minister of ,Water ,Resources ,Water Minister ,
× RELATED பிரான்சுக்கு சுற்றுலா சென்ற பள்ளி ஆசிரியர்கள் சென்னை திரும்பினர்