×

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு இடைக்கால உத்தரவுக்காக ஒத்திவைப்பு

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு இடைக்கால உத்தரவுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ. 4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகார் அளித்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி, 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்தது. அதில்; விசாரணை ஆரம்ப கட்ட அறிக்கையை ஏற்க, நிராகரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம்.

பொது ஊழியருக்கு எதிரான குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வாதிடப்பட்டது. ஊழல் கண்காணிப்பு ஆணையர் என்பவர் விசாரணை அதிகாரி இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை தரும் அறிக்கைக்கு ஸ்டாம்ப் வைக்கும் வழக்கமான நடைமுறை மட்டுமே அவருக்கு உள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்திய, புகாருக்கு எதிர்மறையான அறிக்கையை அளித்த பிறகு அதை ஆராய தேவையில்லை எனவும் கூறியது இடைக்கால உத்தரவுக்காக ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு இடைக்கால உத்தரவுக்காக ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,RS Bharathi ,CHENNAI ,RS Bharati ,AIADMK ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி எங்கே? பாதுகாப்பு...