×

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இலகுரக வாகனம் ஓட்டுநர் பயிற்சி துவக்க விழா அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

சென்னை: முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாநகர் போக்குவரத்துக் கழக அடையார் பணிமனையில் இன்று (13.07.2023) இலகுரக வாகனம் ஓட்டுநர் பயிற்சி துவக்க விழா, Breath Analyzer வழங்குதல், குளிரூட்டப்பட்ட பணியாளர் ஓய்வு அறை, HMV Driving Simulator திறப்பு விழா, சிறப்பு இலவச மருத்துவ முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 2023-2024 ஆம் ஆண்டு போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அடையார் பணிமனையில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் வசதிக்காக, ரூபாய் 5 இலட்சம் பொருட் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளிர்சாதன ஓய்வு அறையினை, இன்று திறந்து வைத்தார். விபத்துக்களை தவிர்த்திடும் பொருட்டு பணிமனைகளில் பேருந்துகளை இயக்க வரும் ஓட்டுநர்களிடம் Breath Analyzer வாயிலாக பரிசோதனை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து பணிமனைகளுக்கும் ரூபாய் 15.05 இலட்ச மதிப்பீட்டில் 29 Breath Analyzer மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.

பொது மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இலகுரக வாகனம் ஒட்டுநர் பயிற்சி மற்றும் HMV Driving Simulator வாயிலாக ஓட்டுநர்கள் பயிற்சி எடுக்கும் பொழுது சாலையில் பேருந்துகள் இயக்கும் பொழுது ஏற்படும் விபத்துக்களை தவிர்த்திட இயலும் என்பதால், ரூபாய் 28.92 இலட்ச மதிப்பீட்டில் 3 HMV Driving Simulator மற்றும் ரூபாய் 8.06 இலட்ச மதிப்பீட்டில் Bolero Car ஒன்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் வழங்கினார். மேலும், அனைத்து பணியாளர்களின் உடல் நலம் பேணிடும் வகையில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச்.ஹசன் மௌலானா, போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திரரெட்டி, மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம், இணை மேலாண் இயக்குநர் க.குணசேகரன், பொது மேலாளர்கள், உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இலகுரக வாகனம் ஓட்டுநர் பயிற்சி துவக்க விழா அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivasankar ,eve of the artist century festival ,Chennai ,Kutamirattaranar ,Doctor Artist ,Muncipal Transport Corporation ,Sivattankar ,Artist Century Festival ,Dinakaran ,
× RELATED கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி