×

சோமாலியாவில் விமானம் தரையிறங்கியபோது ஓடுபாதையில் சறுக்கி நொறுங்கியது: பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

சோமாலியா: சோமாலியாவில் விமானம் தரையிறங்கியபோது ஓடுபாதையில் சறுக்கி நொறுங்கியது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.ஆப்பிரிக்க நாடான சோமாலியா தலைநகர் மொகாதிஷூவில் உள்ள ஏடன் அடே விமான நிலையத்தில் நேற்று ஹல்லா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய பயணிகள் விமானம் தரை இறங்க முயன்றது. அப்போது விமானத்தின் லேண்டிங் கியர் எனப்படும் தரையிறங்கும் கருவி பழுதானது. அதனால் விமானம், ஓடுதளத்தில் சறுக்கி கொண்டே சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி, விமானத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

இருப்பினும் தோல்வியில் முடிந்தது. விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் பக்கவாட்டு சுவரில் மோதி இரண்டாக நொறுங்கியது. இதில் விமானி அமரும் காக்பிட் பகுதி இரண்டாக உடைந்தது. விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அலறி துடித்தனர்.இருப்பினும் இந்த விபத்தில் 30 பயணிகளும் 4 ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 2 பேருக்கு மட்டும் சிறிய காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

The post சோமாலியாவில் விமானம் தரையிறங்கியபோது ஓடுபாதையில் சறுக்கி நொறுங்கியது: பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Somalia ,African ,Dinakaran ,
× RELATED பசுமைப் போராளி…வான்காரி மாத்தாய்