×

மீஞ்சூர் வன்னிப்பாக்கம் ஊராட்சியில் மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் திறக்கவேண்டும்: கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

பொன்னேரி: மீஞ்சூர் வன்னிப்பாக்கம் ஊராட்சியில் மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் திறக்கவேண்டும் என கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.மீஞ்சூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ரவி தலைமையில் நேற்று நடைபெற்றது.

துணை தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட கவுன்சிலர் தேசராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், பருவமழை தொடங்க உள்ள நிலையில், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 55 ஊராட்சிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என 28 கவுன்சிலர்கள் அந்தந்த பகுதியில் உள்ள தேவை குறித்து கோரிக்கை மனுவாக கொடுக்கவேண்டும் என ஒன்றிய குழு தலைவர் கேட்டுக்கொண்டார்.

அதனடிப்படையில், சாலைகள், அரசு கட்டிடங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்த கோரிக்கை மனுவை கவுன்சிலர்கள் வழங்கினர். மேலும் மீஞ்சூர் ஒன்றியம் வன்னிப்பாக்கம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் திறந்துவைத்தார். ஆனால் ஒரே வாரத்தில் மூடப்பட்டது.

இதனால் வன்னிப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமமக்கள் மற்றும் அனுப்பம்பட்டு, இலவம்பேடு, நாலூர், சிறுவாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கவுன்சிலர் பானுப்பிரசாத் கோரிக்கை வைத்தார்.இதற்கு ஒன்றிய குழு தலைவர் ரவி, இதுதொடர்பாக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவித்து டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

The post மீஞ்சூர் வன்னிப்பாக்கம் ஊராட்சியில் மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் திறக்கவேண்டும்: கவுன்சிலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Meenchur Vananakakakam ,Ponneri ,Meenchur Vannakam ,Meenchur ,Vanakaran ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்