×

பிரான்ஸில் இருந்து 26 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்க பாதுகாப்பு கையகப்படுத்தும் கவுன்சில் ஒப்புதல்..!!

டெல்லி: பிரான்ஸில் இருந்து 26 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்க பாதுகாப்பு கையகப்படுத்தும் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்சிடம் இருந்து இந்திய கடற்படைக்கு மேலும் 26 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே பிரான்ஸில் இருந்து 36 ரபேல் விமானங்களை இந்தியா வாங்கியுள்ளது. அவை அனைத்தும் முழுமையாக 3 கட்டங்களாக இந்தியாவுக்கு வழங்கப்பட்டுவிட்டது. முன்பு வாங்கப்பட்ட ரபேல் போர் விமானங்கள் விமானப்படைக்காக வாங்கப்பட்டது.

ஆனால் தற்போது வாங்கப்படவுள்ள 26 ரபேல் போர் விமானங்கள் இந்திய கடற்படைக்காக வாங்கப்படுகிறது. குறிப்பாக இந்திய கடற்படை கப்பல்களில் ரபேல் போர் விமானங்களை பொருத்துவதற்கு இந்தியா முடிவு செய்திருக்கிறது. அதற்காக ரபேல் போர் விமானங்கள் வாங்கப்படவுள்ளன. இதற்கான ஒப்பந்தம் பிரதமர் மோடிக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் இடையே விரைவில் கையெழுத்தாகவுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் 90 ஆயிரம் கோடி என்று கருதப்படுகிறது.

தற்போது பிரதமர் மோடி 2 நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள நிலையில், இந்த ஒப்புதலை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து நாளையோ, அல்லது நாளை மறுதினமோ இதுதொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தவிர இந்திய கப்பல் படைக்கு ஸ்கோபின் வகையைச் சேர்ந்த மேலும் 3 கூடுதல் நீர்மூழ்கி கப்பல் வாங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post பிரான்ஸில் இருந்து 26 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்க பாதுகாப்பு கையகப்படுத்தும் கவுன்சில் ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Tags : Defense Acquisition Council ,India ,France ,Delhi ,Dinakaran ,
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...