ஐஸ்லாந்த்: ஐஸ்லாந்தின் ரெய்காவிக் அருகே லாவா குழம்புகளை வெளியேற்றி வந்த எரிமலை சற்றே சரிய தொடங்கியுள்ளது. ஐஸ்லாந்து தலைநகரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் லிட்லி டூடர் எரிமலை அண்மையில் வெடித்துச் சிதறி லாவா குழம்புகளை ஆறாக வெளியேற்றி வந்தது. எரிமலை வெடிப்பால் அந்த பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்படவே மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
தற்போது அந்த எரிமலையில் இருந்து லாவா குழம்பு வெளியேறிவது குறைந்து வருகிறது. இருப்பினும் எரிமலையில் இருந்து சாம்பல் புகைகள் தொடர்ந்து வெளியேறி வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
The post லாவா குழம்பு வெளியேற்றம் குறைந்தது!: ஐஸ்லாந்தின் ரெய்காவிக் அருகே எரிமலைச் சீற்றம் தணியத் தொடங்கியது..!! appeared first on Dinakaran.