×

சென்னை – பெங்களூருக்கு செல்லும் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிளம்பிய புகை: பயணிகள் அதிர்ச்சி

சென்னை: சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் குடியாத்தம் அருகே சென்ற போது ரயிலின் அடிப்பகுதியில் புகை கிளம்பியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சென்னையில் இருந்து பெங்களூருக்கு பல்வேறு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வைகாசியில் சென்னை – பெங்களூரு இடையே ஏசி வசதி கொண்ட டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை சென்ட்ரல் முதல் பெங்களூரு இடையே செல்லும் இந்த ரயில் இன்று வேலூர் குடியாத்தம் அருகே ரயிலின் எஸ் 6 (S 6) பெட்டியின் சக்கரங்களுக்கிடையே புகை கிளம்பியது. உடனே டிடிஆருக்கு பயணிகள் தகவல் கூறினர். ரயில் ஓட்டுநருக்கும் தகவல் தெரிவிக்கப்பட குடியாத்தம் – ஆம்புர் ஆகிய பகுதிகளுக்கு இடையே ரயில் நிறுத்தப்பட்டது. தீ அணைப்பான்கள் மூலம் உடனடியாக சமயோஜிதமாக செயல்பட்டு புகையை அணைத்தனர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. பிரேக் பிடிக்கும் பகுதியில் புகை உருவானது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் பாதிப்பு சரி செய்யப்பட்டு ரயில் பெங்களூர் புறப்பட்டுச் சென்றது. இது முதன்முறை நடந்த சம்பவம் அல்ல. நாடு முழுவதும் ரயில்களில் தொடர்ந்து இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. ஜூன் 2ஆம் தேதி ஒடிசாவில் ஏற்பட்ட கோர விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் பராமரிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டு சிறு சிறு பிரச்சினைகளும் உடனடியாக களையப்பட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும். அதற்கு மாறாக தண்டவாளங்களிலிருந்து ரயில்கள் இறங்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

The post சென்னை – பெங்களூருக்கு செல்லும் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிளம்பிய புகை: பயணிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai- ,Bangalore ,Chennai ,
× RELATED 100% வேலை வாய்ப்பு பெற்று தரும் ஆச்சார்யா பெங்களூர் பி-ஸ்கூல்