×

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.20 குறைந்து கிலோ ரூ.110 க்கு விற்பனை..!!

சென்னை: சென்னை கோயம்பேடு மொத்த விலை சந்தையில் தக்காளி விலை ரூ.20 குறைந்து கிலோ ரூ.110க்கு விற்பனையாகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி, பீன்ஸ், இன்ஜி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதற்கு வரத்து குறைவு மற்றும் கனமழையால் உற்பத்தி பதிப்பதே காரணமாகும்.

இந்த நிலையில் இன்று தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் தக்காளி விலை ரூ.20 குறைந்து கிலோ ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை நகரத்தில் சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு விற்கப்படுகிறது. இதே போல் சின்ன வெங்காயம் விலையும் சரிந்துள்ளது.

நேற்று ஒரு கிலோ ரூ.200 க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் இன்று கிலோ ரூ.170 விற்பனையாகிறது. இதர காய்கறிகளான பச்சை மிளகாய் கிலோ ரூ.50, இஞ்சி கிலோ ரூ.260, பீன்ஸ் கிலோ ரூ.90 என விலை நிர்ணயம் செய்து விற்கப்படுகிறது. மற்ற காய்கறிகள் எந்த வித விலை மாற்றமும் இல்லாமல் அதே விலையில் தொடர்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.20 குறைந்து கிலோ ரூ.110 க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Coimbed ,Chennai ,Coimbade ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...