×

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து: 18 மாணவிகள் காயம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் B.ED கல்லூரி மாணவிகள் சென்ற பேருந்து மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளனர். சிவகங்கை அருகே கல்லூரி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 18 மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் உள்ள சென்ட்.பால்ஸ் என்ற B.ED கல்லூரி இருக்கிறது. 18 மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்றி கொண்டு கீழடி அருங்காட்சியகம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை என்ற இடத்தில் வரும் போது ஓட்டுனர் சுப்ரமணியன் கிழடிக்கு செல்லக்கூடிய வழியை ஆசிரியரிடம் கேட்டுள்ளார். கூகுள் மேப் கேட்டார் ஆசிரியர் தனது செல்போனில் தேர்வு செய்து ஓட்டுனரிடம் கொடுக்கும் போது ஓட்டுநர் செல்போனை வாங்குவதற்குள் கவனக்குறைவால் தனது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகில் உள்ள பள்ளத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

அதிஷ்டவசமாக மாணவிகளுக்கு பெரிய காயங்களின்றி சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். இதில் ஸ்வாதி என்ற மாணவி தலையில் காயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் வாகன ஓட்டுநர் சுப்ரமணியன் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தானது வாகன ஓட்டுனரின் கவனக்குறைவாலே ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பள்ளி, கல்லூரி வாகனவிபத்து அதிகரித்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். வாகன விபத்தை குறைப்பதற்கு ஓட்டுனர்களுக்கு சரியான அறிவுரை வழங்கினால் மட்டுமே விபத்துகளை குறைக்க முடியும் என்றும் சமூக ஆர்வலர்களின் கருத்து தெரிவித்தனர்.

The post சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து: 18 மாணவிகள் காயம் appeared first on Dinakaran.

Tags : Natarasankottai ,Sivagangai ,B.ED college ,Natarasankottai, Sivagangai ,Dinakaran ,
× RELATED காய்கறி சாகுபடியில் ரசாயன உரத்தை தவிர்க்க அறிவுறுத்தல்