×

தமிழ்நாடு முழுக்க தென்னை விவசாயிகள் போராட்டம்: சாலையில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் எதிர்ப்பு

சேலம்: தேங்காய்க்கு உரிய விலை வழங்க கோரி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலையில் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுப்பட்டனர். சேலம் மாவட்டம் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.140-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். கேரளத்தை போல உரித்த தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.50-க்கு கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மேலும், தேங்காய் உற்பத்திக்கு ரூ.20 செலவாகும் நிலையில் ரூ.6 மட்டுமே தங்களுக்கு கிடைப்பதாக கூறி தேங்காயை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேங்காய் எண்ணையை அரசே கொள்முதல் செய்து ரேசன் கடை மூலமாக விநியோகிக்க வேண்டும். தேங்காய் எண்ணெய்க்கு ஜிஎஸ்டி வரி ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்காய் உடைத்தனர்.

The post தமிழ்நாடு முழுக்க தென்னை விவசாயிகள் போராட்டம்: சாலையில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Nadu ,Salem ,Tamil Nadu ,
× RELATED அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை...