×

கொடைக்கானலில் ஏழைகளின் ஆப்பிள் பேரிக்காய் விளைச்சல் பாதிப்பு; பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. கொடைக்கானல், பாம்பாறுபுரம், அப்சர்வேட்டரி, செண்பகனூர், சின்னபள்ளம் உள்ளிட்ட இடங்களில் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி வாங்கி செல்லும் பழங்களில் ஒன்றாக பேரிக்காய் இருந்து வருகிறது. இனிப்பு மற்றும் புளிப்பு ஆகிய சுவைகளை கொண்ட பேரிக்காய் விளைச்சல் கொடைக்கானலில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் குறைந்தது குறித்து தோட்டக்கலை துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொடைக்கானலில் ஏழைகளின் ஆப்பிள் பேரிக்காய் விளைச்சல் பாதிப்பு; பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை..!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dintugul ,Dintugul district ,
× RELATED கொடைக்கானலில் தொடர் மழை: பழனி வரதமாநதி நீர்த்தேக்கம் நிரம்பி வழிகிறது