×

இந்திய அணி பந்துவீச்சில் 150 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்…சர்வதேச அளவில் 700 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார் அஸ்வின்!

டொமினிகா : இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் அஸ்வினின் சுழலில் சிக்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நேற்று இரவு டொமினிகாவில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ப்ராத்வைட் மற்றும் சந்தர்பால் கூட்டணி ரசிகர்ளுக்கு ஏமாற்றம் அளித்து முறையே 20 , 12 ரன்கள் என அவுட் ஆகி வெளியே சென்றனர் .

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக அலிக் அத்தானாஸ் மட்டும் கொஞ்சம் நிதானித்து விளையாடி 47 ரன்கள் எடுத்து இருந்தார். முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மேற்கிந்திய அணி 64.3 ஓவர்களில் 150 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த இந்திய அணியில் அறிமுக வீரராக ஜெய்ஸ்வால் களமிறங்கினார். முதல் நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் சேர்த்துள்ளது. ஜெய்ஸ்வால் 40 ரன்களுடன் கேப்டன் ரோகித் ஷர்மா 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 700 விக்கெட் வீழ்த்திய 3வது வீரர் அஸ்வின் ஆவார். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 477 விக்கெட்டும், ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டும், டி20 போட்டிகளில் 72 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். ஏற்கனவே அனில் கும்ப்ளே(953), ஹர்பஜன் சிங்(707) ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

The post இந்திய அணி பந்துவீச்சில் 150 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்…சர்வதேச அளவில் 700 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார் அஸ்வின்! appeared first on Dinakaran.

Tags : West Indies ,Dominica ,West Indian Islands ,Aswin ,India ,Dinakaran ,
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...