×

ஒன்றிய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் காங்கிரசார் 10 பேர் கைது

 

கீழ்வேளூர், ஜூலை 13: காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பிற்கு காரணமான ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து நாகையில் ரயில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கூத்தூர் ரயில் நிலையம் அருகே எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலை நேற்று காலை காங்கிரஸ் கட்சியினர் மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அமிர்தராஜா தலைமை வகித்தார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரயில் மறியலில் ஈடுபட்ட பெண் உள்பட 10 பேரை கைது செய்தனர். பின்னர் அனைவரையும் கீழ்வேளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவித்தனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் காங்கிரசார் 10 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Congressmen ,Union government ,Kilvellur ,Congress ,Rahul Gandhi ,Dinakaran ,
× RELATED வளர்க்க நினைக்கவில்லை ஒன்றிய அரசு விவசாயிகளை அழிக்க நினைக்கிறது