×

‘மல்லிப்பூ வச்சி வச்சி வாடுது…’ மாணவிகளுடன் இணைந்து பாடி பெண் இன்ஸ்பெக்டர் அசத்தல்

விருதுநகர்: விருதுநகர் தனியார் கல்லூரியில் பெண்களுக்கான பிரத்யேக பாலியல் துன்புறுத்தல் தடுப்பு பிரிவான விசாகா துவங்கப்பட்டது. அதில், பாலியல் துன்புறுத்தல் தீர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி என்சிசி மாணவிகள் பாடல் பாடினர். அப்போது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விருதுநகர் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரகலா, மாணவிகளுடன் இணைந்து பாடினார். தளபதி பட பாடலான ‘யமுனை ஆற்றிலே’ மற்றும் வெந்து தணிந்தது காடு பட பாடலான ‘மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே’ ஆகிய பாடல்களை பாடினார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சித்ரகலா கூறுகையில், ‘‘மாணவிகள் பிரச்னைகளை எதிர் கொள்ள மிகுந்த வலிமையோடு இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்ட பாரதியாரின் மனதில் உறுதி வேண்டும் என்ற வரிகளை எடுத்துரைத்தேன். காவல்துறையை பெண்கள் பொதுவாக எளிதில் அணுகுவதில்லை. அந்த அச்ச உணர்வை போக்கும் விதத்தில் காவல்துறை அதிகாரி இணக்கமாக இருத்தலை எடுத்துக் காட்டும் விதமாக அவர்கள் பாடிய பாடலை உடன் இணைந்து பாடினேன். அது வைரலாகி வருகிறது’’ என்றார்.

The post ‘மல்லிப்பூ வச்சி வச்சி வாடுது…’ மாணவிகளுடன் இணைந்து பாடி பெண் இன்ஸ்பெக்டர் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Visakha ,Inspector ,Asthal ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...