×

முதல்வர் குறித்து அவதூறு பாஜ நிர்வாகி கைது

தென்காசி: தமிழ்நாடு முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்ட புளியங்குடி பாஜ நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என்.புதுக்குடியை சேர்ந்தவர் பிச்சையா என்ற கனகராஜ்(41). இவர், கேரளாவில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். புளியங்குடி 32வது வார்டு பாஜ செயலாளராக உள்ளார். சமூக வலைதளங்களில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தை பற்றி அவதூறாக பதிவிட்டு வந்துள்ளார். இதுகுறித்து புளியங்குடி நகர திமுக செயலாளர் அந்தோணிசாமி, புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து பிச்சையா என்ற கனகராஜை நேற்று கைது செய்தனர்.

The post முதல்வர் குறித்து அவதூறு பாஜ நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : Baja ,chief minister ,Tenkasi ,Tamil Nadu ,
× RELATED எடியூரப்பா மீது பாலியல் புகாரளித்த...