×

உலகின் பழமையான பனிப்பாறைகள் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிப்பு: விஞ்ஞானி தகவல்

புதுடெல்லி: தென்னாப்பிரிக்காவில் 290 கோடி வருடங்களுக்கு முன் பனிப்பாறைகள் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது என அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்கா,ஓரிகான் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் இல்யா பிந்தேமேன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு இது தொடர்பான கட்டுரை வெளிவந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள மிக பெரிய தங்க சுரங்கத்தின் அருகில் பனிப்பாறைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது 290 கோடி ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

அந்த இடத்தில் பனிப்பாறைகளின் கழிவுகள் கிடந்தன. அந்த பகுதி ஆரம்பத்தில் எப்படி இருந்ததோ அதே போல் இப்பொழுதும் காணப்படுகிறது. இதற்கான ஆதாரமாக பனிப்பாறையின் எஞ்சியுள்ள கழிவுகளும் கிடைத்துள்ளன. அந்த பாறைகளில் கிடைத்த துகள்களை வைத்து அது பாறைகளாக இருந்த போது அதன் தட்ப வெப்பம் மிகவும் குளிராக இருந்திருக்க வேண்டும். உலகின் மிகவும் பழமையான பனிப்பாறைகள் கொண்ட பகுதியாக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post உலகின் பழமையான பனிப்பாறைகள் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிப்பு: விஞ்ஞானி தகவல் appeared first on Dinakaran.

Tags : Africa ,New Delhi ,South Africa ,Dinakaran ,
× RELATED நெஸ்லே குழந்தைகள் உணவில் அதிக...