×

சட்டீஸ்கர் காங்கிரஸ் தலைவர் நியமனம்

புதுடெல்லி: சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக மோகன் மார்க்கத்திற்குப் பதிலாக எம்.பி தீபக் பைஜ் நியமிக்கப்பட்டார். சட்டீஸ்கர் மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. அங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பூபீந்தர்சிங் பாகெல் உள்ளார். சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தீபக் பைஜ் எம்.பி.யை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.

The post சட்டீஸ்கர் காங்கிரஸ் தலைவர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Chattieskar ,Congress ,New Delhi ,Sattieskar ,Mohan Markham ,State Congress Party ,B Depak Paige ,Sattiesgarh ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...