×

வெஸ்ட் இண்டீஸ் திணறல்

டொமினிகா: இந்திய அணியுடனான முதல் டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் ரன் குவிக்க முடியாமல் திணறியது. விண்ட்சர் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியில் ஜெய்ஸ்வால், இஷான் அறிமுகமாகினர். கிரெய்க் பிராத்வெய்ட், தேஜ்நரைன் சந்தர்பால் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்சை தொடங்கினர்.

சந்தர்பால் 12 ரன், பிராத்வெய்ட் 20 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். ஏற்கனவே ஷிவ்நரைன் சந்தர்பால் விக்கெட்டை வீழ்த்தியிருந்த அஷ்வின், நேற்று தேஜ்நரைன் விக்கெட்டை எடுத்ததன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அப்பா, மகன் விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது பவுலர் என்ற பெருமையை பெற்றார். அடுத்து வந்த ரேமன் ரீபர் 2 ரன் எடுத்து ஷர்துல் தாகூர் வேகத்தில் வெளியேற, பிளாக்வுட் 14 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் 28 ஓவரில் 68 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது.

The post வெஸ்ட் இண்டீஸ் திணறல் appeared first on Dinakaran.

Tags : West Indies ,Dominica ,India ,Indies ,Dinakaran ,
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...