×

பேராசிரியரின் கையை துண்டித்த வழக்கு 6 பேர் குற்றவாளிகள்: கொச்சி என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை சேர்ந்தவர் ஜோசப். பேராசிரியர். 2010ம் ஆண்டு இவர் தயாரித்த மலையாள தேர்வுக்கான வினாத்தாளில் இஸ்லாம் மதம் குறித்து அவதூறாக குறிப்பிட்டிருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ஒருகும்பல் தாக்குதல் நடத்தியதில் அவரது இடது உள்ளங்கை துண்டிக்கப்பட்டது. இந்த தாக்குதலை நடத்தியது பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு என தெரியவந்தது. என்ஐஏ நடத்திய விசாரணையில் 33 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொச்சி என்ஐஏ நீதிமன்றம் வழக்கை விசாரித்து 33 பேரில் 11 பேர் குற்றவாளிகள் என்று அறிவித்து தண்டனையும் விதிக்கப்பட்டது. அதன்பின் மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து இரண்டாவது கட்ட விசாரணை தொடங்கியது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. கைது செய்யப்பட்ட 11 பேரில் 6 பேர் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கான தண்டனை நாளை (இன்று) அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி அனில் கே. பாஸ்கர் தெரிவித்தார். மற்ற 5 பேரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

The post பேராசிரியரின் கையை துண்டித்த வழக்கு 6 பேர் குற்றவாளிகள்: கொச்சி என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kochi NIA ,Thiruvananthapuram ,Joseph ,Thotupuzha ,Idukki district ,Kerala ,
× RELATED மது விருந்தில் ரெய்டு; ரவுடி வீட்டின்...