×

கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரேசா ஆலயத்தில் 100 தொடர் ஜெபமாலை

திங்கள்சந்தை, ஜூலை 13: கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரேசா ஆலயத்தில் 100 தொடர் ஜெபமாலை செய்து இறைவனுக்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி நாளை தொடங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது.
உலகிலேயே புனிதராக அறிவிக்கும் முன்பே சிறுமலர் தெரேசாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் கண்டன்விளை புனித தெரேசா ஆலயம். இந்த ஆலயம் 1924ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ம் தேதி அன்றைய கொல்லம் மறைமாவட்ட ஆயர் அலோசியஸ் மரிய பென்சிகரால் அர்ச்சிக்கப்பட்டது. 1925 மே 17ல் சிறுமலர் தெரேசா புனிதராக அறிவிக்கப்பட்டார். புனிதையின் (சிறுமலர் தெரேசா) உடன் பிறந்த இரண்டு சகோதரிகளால் 1931 ம் ஆண்டு கண்டன்விளை ஆலயத்திற்கு தரப்பட்ட 2 ஆலய மணிகள் இன்றும் தனது மணி ஓசையால் பக்தர்களின் இதயங்களில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. புனிதையின் பேரருளிக்கம் (புனிதப்பண்டம்) ஆலயத்தில் உள்ளது. வரும் 2024 ஏப்ரல் மாதம் இந்த ஆலயம் நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளது.

இதையடுத்து கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரேசா ஆலயத்தில் 100 தொடர் ஜெபமாலை செய்து இறைவனுக்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி நாளை தொடங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. நாளை (14ம் தேதி) காலை 7 மணி முதல் 15 ம் தேதி மாலை 7 மணி வரை நடக்கும் இந்த ஜெபமாலை ஜெபம் நிகழ்வில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். ஜெபமாலை நிகழ்வை கண்டன்விளை கிளை பங்குகளான சித்தன்தோப்பு, பண்டாரவிளை, இரணியல் மற்றும் அன்பியங்கள், சங்கங்கள், பக்தசபை இயக்கங்கள், திருத்தூது கழகங்கள், கண்டன்விளை பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு அருட்பணியாளர்கள் ஆகியோர் இணைந்து சிறப்பிக்கின்றனர். தொடர் ஜெபமாலை முடிவில் 15ம் தேதி மாலை 7 மணிக்கு காரங்காடு வட்டார முதல்வரும் கண்டன்விளை பங்கு தந்தையுமான அருட்பணி சகாயஜஸ்டஸ் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது.

The post கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரேசா ஆலயத்தில் 100 தொடர் ஜெபமாலை appeared first on Dinakaran.

Tags : Teresa ,Jesus ,Kandanweil ,Kandanwile ,Lord ,Jesus Teresa ,Kandanwel ,
× RELATED அதிமுக மாஜி அமைச்சரின் கல்லூரியில் மாணவன் சாவு