×
Saravana Stores

இஎஸ்ஐ மருந்தகங்களில் அமைச்சர் திடீர் ஆய்வு

சென்னை: இஎஸ்ஐ மருந்தகங்களில் அமைச்சர் சி.வி.கணேசன் திடீர்ஆய்வு மேற்கொண்டார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் அடையாறு மற்றும் சைதாப்பேட்டை இ.எஸ்.ஐ. மருந்தகங்களில் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வெளி நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்தும் போதுமான உயிர் காக்கும் மருந்துகள் இருப்பில் உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.மருந்தகங்களின் சுற்றுச்சூழலை சுகாதாரத்துடன் நன்கு பராமரிக்க வேண்டும் எனவும், நோயாளிகளிடம் பரிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்களுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தினார்.

The post இஎஸ்ஐ மருந்தகங்களில் அமைச்சர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : ESI ,Chennai ,Minister ,C. CV Ganesan ,CV ,Ganesan ,ESI Pharmaceuticals ,Dinakaran ,
× RELATED பல்லாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு