×

கடந்த ஜூன் மாதத்தில் வாகன விற்பனை 10 சதவீதம் அதிகரிப்பு

வாகன விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் 10 சதவீதம் அதிகரித்திருப்பதாக, ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 18,63,868 வாகனங்கள் விற்கப்பட்டன. முந்தைய ஆண்டு இதே மாதத்தில் 17,01,105 வாகனங்கள் விற்பனையாகின. இத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் பயணிகள் வாகன விற்பனை 5% அதிகரித்து 2,95,299 வாகனங்களும், டூவீலர்கள் 7% அதிகரித்து 13,10,186 வாகனங்களும் விற்பனையாகின.

இதுபோல், ஆட்டோ உள்ளிட்ட மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 75% உயர்ந்து 86,511 ஆகவும், டிராக்டர்கள் விற்பனை 45% உயர்ந்து 98,660 ஆகவும் அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த அளவில் வாகன விற்பனை 10 சதவீதம் அதிகரித்திருந்தாலும், முந்தைய மாதத்தை விட 8 கடந்த மாதம் விற்பனை 8 சதவீதம் குறைந்துள்ளது என டீலர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

The post கடந்த ஜூன் மாதத்தில் வாகன விற்பனை 10 சதவீதம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Federation of Automobile Dealers ,Dinakaran ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்