×

தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்

சென்னை: கடந்த 1977ம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜாவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. ‘கன்னி பருவத்திலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘மகாநதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நேற்று இரவு தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மரணமடைந்தார். அவரது உடல் இன்று காலை சென்னை குரோம்பேட்டை மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அவரது மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “ரசிகர்களின் மனதை விட்டு அகலாத பல மகத்தான திரைப்படங்களைத் தமிழுக்குத் தந்த கலையார்வம் மிக்க தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைந்துவிட்டார்.

என் திரைவாழ்வின் முக்கியமான திரைப்படங்களான 16 வயதினிலே, மகாநதி ஆகிய படங்கள் அவரது தயாரிப்பில் உருவானவை. அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

The post தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,SA Rajkannu ,Chennai ,Bharathiraja ,
× RELATED ஒளிமிக்க சிந்தனையும் உறுதிகொண்ட...