×

கோடநாடு பங்களாவில் இருந்து கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக 9 பொருட்களை கைபற்றியது சிபிசிஐடி போலீஸ்

நீலகிரி: கோடநாடு பங்களாவில் இருந்து கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக 9 பொருட்களை சிபிசிஐடி போலிசார் கைபற்றியுள்ளனர். அந்த 9 பொருட்களை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலிசார் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே இருக்க கூடிய கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் போது இரவு காவலாளி ஓம்பகதூர் படுகொலை செய்யபட்டார். இதுகுறித்த வழக்கானது கடந்த 10 மாதங்களுக்கு முன்னதாக சிபிசிஐடி போலிசாருக்கு மாற்றபட்டது. அதனை தொடர்ந்து, ஏடிஎஸ்பி முருகவேல் அடங்கிய 50-க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலிசார் தொடர்ந்து இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதுவரை 140-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணையானது நடத்தபட்டுள்ளது. கோடநாடு பங்களாவில் இரண்டு முறை விசாரணையானது நடத்தபட்டுள்ளது. அதனை தொடர்ந்து 3-வது முறையாக கடந்த 10-ம் தேதி அங்குள்ள மேளாலர் நடராஜன் மற்றும் வழக்கின் முக்கிய சாட்சியாக சேர்க்கபட்டுள்ள முனிராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தபட்டுள்ளது.

மேலும் கொள்ளையடிக்கபட்டதாக கூறபட 3 அறைகளில் சோதனை நடத்தபட்டு அங்குள்ள பொருட்களை கைபற்றியுள்ளனர். கோடநாடு பங்களாவின் வரைபடங்கள் -2, புகைபடங்கள்-3, ஜெயலலிதாவின் அறை மற்றும் சசிகலா அறையில் இருந்த முக்கிய பொருட்கள் என 9 பொருட்களை கைபற்றியுள்ளதாக சிபிசிஐடி போலிசார் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த ஆவணங்களை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலிசார் நேற்று முன்தினம் (10.07.2023) ஒப்படைத்தனர்.

இந்த வழக்கில் இதுவரை பறிமுதல் செய்யபட்டுள்ள 8 செல்போன்களை ஆய்வுக்கு அனுப்ப நீதிபதி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post கோடநாடு பங்களாவில் இருந்து கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக 9 பொருட்களை கைபற்றியது சிபிசிஐடி போலீஸ் appeared first on Dinakaran.

Tags : CPCIT police ,Kondanadu bungalow ,Nilgiri ,CPCID police ,Kodanadu bungalow ,Dinakaran ,
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...