×

இந்தாண்டு புதிதாக 4200 பேருந்துகள் வாங்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு விரைவு போகுவரத்து கழக பணியாளர்களின் ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த ரத்த தான முகாமை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:

போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்கும் அறை குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழக பணி காலத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. 14வது ஊதிய குழு பேச்சுவார்த்தையின்படி ஊதிய உயர்வு நிலுவை தொகையுடன் வழங்கப்பட்டுள்ளது.

இன்று 10 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் 1லட்சத்து 14ஆயிரம் பேருக்கு ரூ.121 கோடி நிதி வழங்கப்பட உள்ளது. முழுவதுமாக தனியார் மயம் கிடையாது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு புதிய ஓட்டுநர், நடத்துனர் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படும்.

புதிதாக ஓட்டுநர், நடத்துனர் நியமிக்கப்பட்டதும், ஒப்பந்த பணியாளர்கள் விடுவிக்கப்படுவார்கள். இது தற்காலிக ஏற்பாடு தான். நிரந்தரமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம், தனியார் மயம் எப்போதும் கிடையாது. இந்த ஆண்டு 4200 புதிய பேருந்துகள் வாங்கப்படவுள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 200 பேருந்துகள் வாங்கப்படவுள்ளது.

The post இந்தாண்டு புதிதாக 4200 பேருந்துகள் வாங்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,Minister ,Sivasankar ,Chennai ,Govt ,. Fast Transport ,Club ,Pallavan Residences ,Century of Artist ,Year ,Dinakaran ,
× RELATED என்னை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி பேச்சு