×

திமுக மருத்துவ அணி மாவட்ட, சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் நியமனம்: செயலாளர் எழிலன் அறிவிப்பு

சென்னை: திமுக மருத்துவ அணி மாவட்ட, சட்டமன்ற தொகுதி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன் அறிவித்துள்ளார்.இது குறித்து மருத்துவ அணி செயலாளர் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:கழகத்தலைவர் ஆணைப்படி மாவட்ட செயலாளர் ஒப்புதலோடு திமுக மருத்துவ அணியின் மாவட்ட மற்றும் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.அதன்படி,சென்னை தென்மேற்கு மாவட்ட தலைவராக சரவணகுமார், துணைதலைவராக ஜெயகர், துணை அமைப்பாளர்களாக நிவிதா, சில்வியா, விவேகானந்தன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். மயிலாப்பூர் தொகுதி அமைப்பாளராக ஜனனி, துணை அமைப்பாளர்களாக சக்தி லாவண்யாபி, முருகவேல், மாறன், லாரன்ஷியாபி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

தி.நகர் தொகுதி அமைப்பாளராக லட்சுமணன், துணை அமைப்பாளராக கார்த்திக்ராஜா நியமிக்கப்படுகிறார்கள்.சென்னை வடக்கு மாவட்ட தலைவராக பார்த்தசாரதி, துணை தலைவர்களாக ராஜேஷ்குமார், குணசேகரன், அமைப்பாளராக கோபால் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.ஆர்.கே.நகர் தொகுதி அமைப்பாளராக ஷாலினி, துணை அமைப்பாளர்களாக ஜான்பிராங்கிளின், விஜயகுமார் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

மாதவரம் தொகுதி அமைப்பாளராக நிவேதித்தா, துணை அமைப்பாளராக சுரேஷ் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.திருவொற்றியூர் தொகுதி அமைப்பாளராக கிஷோர், துணை அமைப்பாளர்களாக ஜகநாதன், ஜெகநாதன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.சென்னை வடக்கு தலைவராக பாண்டியராஜ், துணை தலைவராக பாலயாழினி, அஜித், சதிஷ்குமார், ராஜரத்தினம், துணை அமைப்பாளர்களாக சாமிலி, சீனிவாசன், தேவக்குமார் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.பெரம்பூர் தொகுதி அமைப்பாளராக கார்த்திக், துணை அமைப்பாளர்களாக ஷேக் அப்துல்லா, சரவணக்குமார், விஜயகுமார், சுரேஷ்பாபு ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். ராயபுரம் தொகுதி அமைப்பாளராக சுரேந்தர், துணை அமைப்பாளர்களாக முகமது ஹிப்ராஹீம், ஜெகன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

பூந்தமல்லி தொகுதி துணை அமைப்பாளராக கோபி நியமிக்கப்படுகிறார். ஆவடி தொகுதி அமைப்பாளராக கிஷோர் குமார், துணை அமைப்பாளர்களாக கேசவன், அஜித்குமார், பால்ராஜ், நவீன் குமார், சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.திருவள்ளூர் மத்திய மாவட்ட தலைவராக விஜயலட்சுமி, துணைத்தலைவர்களாக அஜீம்பாஷா, கிருஷ்ணன், ஜெய்சங்கர், அமைப்பாளராக ராஜேஷ்குமார், துணை அமைப்பாளர்களாக ரோஷினி, சண்முகசிவா, லியோ மெக்டலின் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவராக ராஜேந்திரன், துணை தலைவராக முரளி, அமைப்பாளராக சாம்ஜெபராஜ், துணை அமைப்பாளர்களாக பிரதீப் குமார், கவியரசு, சதிஷ் மணிகண்டன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post திமுக மருத்துவ அணி மாவட்ட, சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் நியமனம்: செயலாளர் எழிலன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK Medical Team District ,Assembly ,Ezhilan ,Chennai ,Assembly Constituency ,Medical ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு