×

யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது

யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 1978-ல் யமுனை ஆற்றின் நீர்மட்டம் 207.49 மீட்டர் அளவுக்கு உயர்ந்ததே அதிகபட்ச வெள்ளமாக இருந்தது. தற்போது அரியானா ஹத்னிகுண்ட் அணையில் 4 லட்சம் கனஅடி நீர் திறப்பால் யமுனை நீர்மட்டம் 207.55 மீட்டரை தொட்டது. கரைபுரண்டு ஓடும் யமுனை வெள்ளத்தால் டெல்லியின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. மழை வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். டெல்லியில் யமுனை ஆற்றில் அமைந்துள்ள பழைய ரயில்வே பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. யமுனையில் வரலாறு காணாத வெள்ளம்  சூழ்ந்துள்ள வட்டாரங்களில் இருந்து மக்களை அழைத்துச் செல்ல 45 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.யமுனை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஓக்லா அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டு வெள்ளம் வெளியேற்றம்

The post யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது appeared first on Dinakaran.

Tags : Yamuna River ,Yamunai River ,Dinakaran ,
× RELATED டெல்லி குடிநீர் பிரச்சனை: யமுனை நதி வாரியத்துக்கு ஆணை