×

கோவில்பட்டி அருகே ஒருகிலோ தக்காளியை ரூ.10க்கு கேட்டு தகராறு செய்த விவகாரத்தில் 6 பேர் மீது வழக்கு பதிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஒருகிலோ தக்காளியை ரூ.10க்கு கேட்டு தகராறு செய்த விவகாரத்தில் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குலத்தில் அரசின் உரிய அனுமதி பெறாத தனியார் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. நீதிமன்றம் தினசரி சந்தை செயல்பட தடை விதித்த பிறகும் செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் வடக்கு திட்டங்குலத்தை சேர்ந்த குவாலிஸ்ராஜா நேற்று தனியார் தினசரி சந்தையில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த கடையில் ஒரு கிலோ தக்காளி எவ்வளவு என்று கேட்டுள்ளார். கடையிலிருந்த வியாபாரி ஒருகிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறியுள்ளார். இதையடுத்து குவாலிஸ்ராஜா தனக்கு ஒருகிலோ தக்காளி ரூ.10க்கு கொடுக்க வேண்டும் என கேட்ட நிலையில் வியாபாரிக்கும் குவாலிஸ்ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றியதையடுத்து வியாபாரி மகாராஜனை, குவாலிஸ்ராஜா தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் குவாலிஸ்ராஜா தனது நண்பர்கள் 5 பேரை அழைத்து வந்து மீண்டும் வியாபாரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து வியாபாரி மகாராஜா கொடுத்த புகாரின் அடிப்படியில் குவாலிஸ்ராஜா உள்ளிட்ட 5 பேர் மீதும், குவாலிஸ்ராஜாவை, வியாபாரி விபசாரி தாக்கியதாகவும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post கோவில்பட்டி அருகே ஒருகிலோ தக்காளியை ரூ.10க்கு கேட்டு தகராறு செய்த விவகாரத்தில் 6 பேர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Govilbatti ,Thoothukudi ,Govilbatti, Thoothukudi district ,Oekilo ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...