×

கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் புத்தர் சிலை கண்டெடுப்பு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் பழங்கால கருங்கல் புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே வாழ்க்கை கிராமம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் அப்பகுதியினர் மீன்பிடிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது கொள்ளிடம் ஆற்றின் நடுவே மணல் திட்டு பகுதியில் பழங்கால கருங்கல்லாலான புத்தர் சிலை இருப்பதை கண்டனர். சுமார் நான்கடி உயரம் கொண்ட இந்த புத்தர் சிலை குறித்து சத்தியமங்கலம் ஊராட்சி தலைவர் செல்வராஜிக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து சத்தியமங்கலம் விஏஓ மனோகரன், கபிஸ்தலம் ஆர்ஐ ராஜதேவி, பாபநாசம் தாசில்தார் பூங்கொடி மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த புத்தர் சிலையை மீட்டு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சிலை எங்கிருந்து இங்கு வந்தது? என்பது குறித்து கபிஸ்தலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் புத்தர் சிலை கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Buddha ,Kollidam river ,Kumbakonam ,Kumbakonam.Jiyaga ,Kapistalam, Thanjavur district ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் அருகே பரபரப்பு: கிராமத்திற்குள் வந்த முதலை