×

இந்தியாவில் ஆப்பிள் ஐ-போன்களை தயாரிக்கும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெறவுள்ளது டாடா குழுமம்

மும்பை : இந்தியாவில் முதன்முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை டாடா குழுமம் விரைவில் தயாரிக்க உள்ளது. தைவானை தலையிடமாக கொண்ட விஸ்டரான் என்ற நிறுவனம் கர்நாடகாவில் தொழிற்சாலை அமைத்து ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து கடைசியாக வெளிவந்த ஐபோன் 14 மாடலை விஸ்டரான உற்பத்தி செய்தது.

10,000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் இந்த தொழிற்சாலையை டாடா நிறுவனம் 5,000 கோடிக்கு வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ஓர் ஆண்டாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், அடுத்த மாதம் ஐபோன் தொழிற்சாலையை கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்மூலம் தயாரிக்கும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை டாடா குழுமம் பெற போகிறது. ஏற்கனவே விஸ்ட்ரான் நிறுவனம் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலன நிதி ஆண்டில் சுமார் 15,000 கோடி ருபாய் மதிப்பிலான ஐபோன்களை தங்கள் தொழிற்சாலையில் இருந்து உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

The post இந்தியாவில் ஆப்பிள் ஐ-போன்களை தயாரிக்கும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெறவுள்ளது டாடா குழுமம் appeared first on Dinakaran.

Tags : Tata Group ,Apple ,India ,Mumbai ,Taiwan ,Dinakaran ,
× RELATED ஆப்பிள் அல்வா