×

சிவகங்கையில் பள்ளி வேன் கவிழ்ந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் எதிரொலி; வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான குழு அதிரடி ஆய்வு..!!

சிவகங்கை: சிவகங்கையில் பள்ளி வேன் கவிழ்ந்து 13 வயது மாணவன் உயிரிழந்த நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை அருகே தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று கண்மாய் ஓரம் சென்று கொண்டிருந்த போது தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 7ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் சுமார் 20 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 மாணவர்கள் சற்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அனுமதி பெறாத பள்ளி வாகனத்தால் தான் நடந்துள்ளது என்று ஆய்வில் கூறப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான குழுவினர் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர். பள்ளி மற்றும் தனியார் வாகனங்கள் உரிய அனுமதி பெற்று இயங்குகிறதா? என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

வாகன ஓட்டுனர்கள் முறையாக சீருடை அணிந்துள்ளனரா? வாகனங்களில் அடிப்படை பாதுகாப்பு உள்ளதா? பள்ளி வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்கு உதவியாளர்கள் இருக்கின்றனரா? ஓட்டுநர் உரிமம் உள்ளதா? என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. காலை முதல் கிட்டத்தட்ட 7 வாகனங்களில் ஆய்வு நடத்தி சுமார் 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

The post சிவகங்கையில் பள்ளி வேன் கவிழ்ந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் எதிரொலி; வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான குழு அதிரடி ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,National Transport Officer ,Sivagangai ,Siwaganga ,
× RELATED சிவகங்கை மாவட்டம் முழுவதும் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் சுவரொட்டி!!