×

2 ஆண்டுகளுக்கு பிறகு 80 அடிக்கும் கீழ் சரிந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்

சேலம்: 2 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 80.29 அடியில் இருந்து 79.40 அடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து 198 கனஅடியில் இருந்து 161 கனஅடியாக குறைந்துள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 ஆண்டுகளுக்கு பிறகு 80 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி அணையின் நீர்மட்டம் 79.59 அடியாக இருந்தது. அதன்பிறகு மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இதன் காரணமாக கேரளா, கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை மீண்டும் பொய்த்துப்போனதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கான நீர்வரத்தும் குறைந்துள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 87 அடியாகவும், நீர்வரத்து 7,600 கனஅடியாகவும் குறைந்துள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் 49 அடியாகவும், நீர்வரத்து 20,000 கனஅடியாகவும் உள்ளது.

இரு அணைகளிலும் 25 டிஎம்சி அளவிற்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்நிலையில் ஜூன், ஜூலை மாதத்தில் சுமார் 40 டிஎம்சி அளவிற்கு தண்ணீர் வழங்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை 3 டிஎம்சி அளவிற்கு மட்டுமே மேட்டூர் அணைக்கு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதன் காரணமாகவும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதாலும் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 12,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக நேற்று குறைக்கப்பட்டது.

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி அணையின் நீர்மட்டம் 82 அடியாக இருந்தபோது காலதாமதமாக பெய்த பருவ மழையால் ஒரே நாளில் 19 அடி நீர்மட்டம் உயர்ந்து 109 அடியாக உயர்ந்தது. அதே போல இந்த ஆண்டு 2 முறை பெய்த பருவமழை பொய்த்துள்ளதால் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post 2 ஆண்டுகளுக்கு பிறகு 80 அடிக்கும் கீழ் சரிந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் appeared first on Dinakaran.

Tags : Matour Dam ,Salem ,Mattur Dam ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...