×

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான விஜயராகவன் மீது லஞ்ச ஒழிப்பு போலிசார் வழக்கு பதிவு

சென்னை: உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான விஜயராகவன் மீது லஞ்ச ஒழிப்பு போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. விஜயராகவனுக்கு உதவியாக இருந்த தொழில்நுட்ப நிறுவனம் மீதும் லஞ்ச ஒழிப்பு போலிசார் வழக்கு பதிவு செய்தனர்.

தமிழ் மொழியை பல்வேறு காலகட்டங்களில், ஆராய்ச்சி செய்து வருங்கால சந்ததியினருக்கு தமிழ் மொழியை மிக சிறப்பாக அளிக்க்வேண்டும் என்ற நோக்கத்தில் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கபட்டது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் இயக்குனராக விஜயராகவன் செயல்பட்டு வந்தார். அப்போது அரசு தமிழ் மொழி வளர்ச்சிகாக ஒதுக்கிய ரூ.34 லட்சம் நிதியில், ரூ.12 லட்சத்தை முறைகேடு செய்ததாக லஞ்சஒழிப்பு போலிசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஓலை சுவடிகளை பாதுகாப்பதற்காக ரூ.34 லட்சம் நிதி ஒதுக்கபட்டது. இதற்காக டெண்டர் விடபட்டபோது, இந்த டெண்டரை பெற்ற நிறுவனம் சரியான விதிமுறைகளை பின்பற்ற வில்லை என கூறி வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. சுமார் ரூ.12 லட்சம் மோசசி செய்துள்ளதகா வழக்கு பதிவு செய்யபட்டது. இதனை தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தபட்டு வருகிறது.

The post உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான விஜயராகவன் மீது லஞ்ச ஒழிப்பு போலிசார் வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Vijayaragavan ,World Tamil Research Institute ,Chennai ,
× RELATED 2024ம் ஆண்டுக்கான தமிழ் முதுகலைப் பட்டம்...