×

ஆன்லைன் ஷாப்பிங்கால் சோகம்; தீபாவளி நேரத்திலும் விற்பனை மந்தமென வேதனை

திருச்சி: கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்து திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டார கிராமங்களில் ஆயத்த ஆடை உற்பத்தி அதிகம். மணப்பாறையில் உற்பத்தியாகும் இரு பலருக்கான அனைத்து விதமான ஆடைகளை தமிழ்நாடு முழுவதும் சந்தைப்படுத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில் பெரும் நஷ்ட்டத்தை எதிர்கொண்ட ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் தீபாவளி பண்டிகையை தங்களின் விடியலாக நம்பியிருந்தனர். அனால் பண்டிகை நெருங்கி வரும் நேரத்திலும் விற்பனை சூடுபிடிக்கவில்லை.ஆன்லைன் விற்பனை மோகம் அதிகரித்ததே தங்களுக்கு நஷ்டம் ஏற்பட கரணம் என்று ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். புத்தாநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் குடிசை தொழிலாக இளைஞர்கள் பலரும் ஆயத்த ஆடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வியாபாரம் இல்லாததால் தொழிலார்களுக்கு ஊதியம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.பொதுமக்கள் ஆன்லைன் வர்த்தக மோகத்தை தவிர்த்து உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வேண்டுமென்று ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். கடைகளுக்கு நேரில் வந்து தரமான ஆயத்த ஆடைகளை வாங்க முன்வர வேண்டுமென்பதும் அவர்கள் கோரிக்கையாகும்….

The post ஆன்லைன் ஷாப்பிங்கால் சோகம்; தீபாவளி நேரத்திலும் விற்பனை மந்தமென வேதனை appeared first on Dinakaran.

Tags : Diwali ,Trichy ,Govai ,Erode ,Tiruppur ,Manpara Circumstance Villages ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...