×

திரையரங்குகளில் ஐபிஎல், உலக அழகி போட்டி போன்ற பொழுது போக்கு அம்சங்களை திரையிட அனுமதி வழங்குக : திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை : திரையரங்குகளில் ஐபில் மற்றும் உலக அழகி போட்டி போன்ற பொழுது போக்கு அம்சங்களையும் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம், திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான 8 வாரங்கள் கழித்தே ஓடிடி-யில் வெளியிட வேண்டும் என்றும் திரையரங்குகளில் வெளியான பின் ஓடிடியில் ஒளிபரப்பாகும் படங்களுக்கு 10% ராய்ல்டி வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

டிக்கெட் கட்டணமத்தை ரூ. 250 வரை நிர்ணயிக்க அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளதாக கூறிய அவர், திரையரங்குகளில் திரைப்படங்கள் மட்டும் திரையிடும் சட்டத்தை மாற்றி உலக அழகி போட்டி, ஐபிஎல், உலக கோப்பை போன்ற பொழுது போக்கு அம்சங்களை திரையிட அனுமதி வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். பிரபல நடிகர்களை மட்டுமே வைத்து படம் எடுக்காமல் வளரும் நடிகர்களை வைத்தும் படம் எடுக்க முன்னணி இயக்குனர்கள் முன் வர வேண்டும் என்றும் பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்தார். மேலும் நடிகர்கள் நல்ல கதைகளை தேர்வு செய்து ஆண்டுக்கு 4 படங்கள் வரை நடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

The post திரையரங்குகளில் ஐபிஎல், உலக அழகி போட்டி போன்ற பொழுது போக்கு அம்சங்களை திரையிட அனுமதி வழங்குக : திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...