×

தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு.. மதுரை, நெல்லை செல்லும் ரயில்களின் படுக்கை வசதி டிக்கெட்டுகள் 10 நிமிடங்களில் விற்று தீர்ந்தன!!

சென்னை:தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களால் ரயில், பஸ்களில் கூட்டம் அலைமோதும் இதற்கென தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நீண்டதூரம் பயணிப்பவர் ரயில்களில் செல்லவே அதிகம் விரும்புகின்றனர். ரயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை 8 மணிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இன்று காலை 8 மணி முதல் ரயில் டிக்கெட் கவுன்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். வரும் 12ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9ம் தேதியும், 13ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 10ம் தேதியும், 14ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 11ம் தேதியும் பயணம் செய்ய முடியும்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி, நவம்பர் 9ம் தேதிக்கான ரயில்களின் முன்பதிவு, கவுன்டர்களில் காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், சென்னையில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் மற்றும் திருநெல்வேலி செல்லும் நெல்லை விரைவு ரயில்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் படுக்கை வசதி டிக்கெட்டுகள் (Sleeper Class) 10 நிமிடங்களில் விற்று தீர்ந்தன.

The post தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு.. மதுரை, நெல்லை செல்லும் ரயில்களின் படுக்கை வசதி டிக்கெட்டுகள் 10 நிமிடங்களில் விற்று தீர்ந்தன!! appeared first on Dinakaran.

Tags : Diwali Festive ,Madurai ,Chennai ,Tamil Nadu Government ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...