×

மக்களவை தேர்தலில் ஓபிஎஸ்சுடன் கூட்டணி: பாஜ எம்எல்ஏ பேட்டி

நெல்லை: மக்களவை தேர்தலில் கூட்டணி கண்டிப்பாக ஓபிஎஸ்சுடன் இருக்கும் என பாஜ சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். பாஜவின் நோக்கம் அதுதான்.

மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தையும் அரசு குறைக்க வேண்டும். ஆளுநரும், முதல்வரும் அவரவர் வேலைகளை செய்து வருகின்றனர். ஆளுநரின் வார்த்தைகள் எந்த இடத்திலும் குந்தகம் விளைவிக்கும் வகையில் இல்லை. மக்களவை தேர்தலில் கூட்டணி கண்டிப்பாக ஓபிஎஸ்சுடன் இருக்கும். காவல்துறை அதிகாரிகளுக்கு அதிக மன உளைச்சல் போக்க முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post மக்களவை தேர்தலில் ஓபிஎஸ்சுடன் கூட்டணி: பாஜ எம்எல்ஏ பேட்டி appeared first on Dinakaran.

Tags : Baja MLA ,Baja Assembly ,Nayanar Nagendran ,OPS ,OBS Alliance for Population Elections ,Dinakaran ,
× RELATED நாளை நீங்களும் ஆளுநராகலாம்: நயினார்...