×

‘வழி நெடுக அரசு பள்ளி… அனைவருக்கும் தெரியலையே’பாடகராக மாறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் தலைமை ஆசிரியர்

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 65 ஆண்டு பழமையான இப்பள்ளி மாவட்ட அளவில் தொடர்ந்து 5வது ஆண்டாக 100 சதவீத மாணவர் சேர்க்கையில் தன்னிறைவு பெற்று விளங்குகிறது. இப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்தர், அரசு பள்ளியில் சேர்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை வரவேற்று உற்சாகப்படுத்தும்விதமாக, பிரபலமான சூப்பர் ஹிட் பாடலான ‘வழிநெடுக காட்டுமல்லி’ என்ற பாடலை ரீமேக் செய்து பாடியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பாடல் வருமாறு :

‘‘வழிநெடுக அரசு பள்ளி,
அனைவருக்குமே தெரியலையே…
உழைச்ச பணத்தை பத்திரமா…
சேர்த்து வைங்க நிச்சயமா…
பெருமைக்காக தனியாரு
பள்ளியில் சேர்த்தால் கஷ்டமம்மா…
‘‘அனைவரையும் அழைக்கிறதே…
அன்புடனே அரசுப்பள்ளி…
தாய்மொழியிலே படிச்சிடலாம்..
தரமான கல்வியை பெற்றிடலாம்…
இலவச கல்வி கிடைக்கையிலே…
கட்டண கல்வி வேண்டாமே…’’

என்ற வரிகளுடன் பாடியுள்ளார். இப்பாடல் பெற்றோர், மாணவர்களிடையே மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது. தலைமையாசிரியரின் இந்த பாடலை அனைவரும் வெகுவாக பாராட்டியுள்ளனர். மேலும், இவர் தமிழக அரசால் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டம், புதுமை பெண் திட்டம், இலவச சீருடை, காலணி, குறித்தும் விளக்கி பாடலாக பாடியுள்ளார்.

The post ‘வழி நெடுக அரசு பள்ளி… அனைவருக்கும் தெரியலையே’பாடகராக மாறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் தலைமை ஆசிரியர் appeared first on Dinakaran.

Tags : Neduka Govt. Nilakottai ,Panchayat Union Primary School ,Ammaiyanayakanur ,Kodairod, Dindigul District ,
× RELATED குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து