
புதுடெல்லி: ரூ.200 கோடி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில் சுகேஷின் மனைவி உள்பட 3 பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் 2017ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டி.டி.வி. தினகரன் சார்பில் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றபோது கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கு பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த தொழில் அதிபர் ஷிவிந்தர் சிங்கிற்கு ஜாமீன் பெற்று தருவதாக கூறி அவரது மனைவியான அதிதி சிங்கிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளார். இந்த வழக்கில், சுகேஷ் சந்திரசேகரின் மனைவியும் நடிகையுமான லீனா மரியா பவுலோஸ் சார்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றநீதிபதி தினேஷ்குமார் சர்மா விசாரித்து சுகேஷ் மனைவி நடிகை லீனாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளார்.
The post ரூ.200 கோடி மோசடி சுகேஷ் மனைவிக்கு ஜாமீன் மறுப்பு appeared first on Dinakaran.