×

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து: விமானி, மெக்சிகோவை சேர்ந்த 5 பேர் பலி

காத்மண்ட்: நேபாளத்தில் தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.இதில் விமானி உட்பட மெக்சிகோவை சேர்ந்த 5 சுற்றுலா பயணிகள் 5 பேர் பலியானார்கள். நேபாளத்தின் சொலுகும்பூ மாவட்டத்தில் உள்ள சுர்கே விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 10.04 மணிக்கு ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த ஹெலிகாப்டரில் நேபாளத்தை சேர்ந்த மூத்த விமானி குருங் மற்றும் சுற்றுலா வந்த மெக்சிகோவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர் பயணித்தனர். ஹெலிகாப்டர் 12,000 அடி உயரத்தில் எவரெஸ்ட் சிகரம் அருகே சென்றேபாது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து ஹெலிகாப்டரை தேடும் பணி துவங்கியது. இந்நிலையில் சோலுகும்பு மாவட்டத்தின் லிகுபிகே நகராட்சியில் லம்ஜூரா பகுதியில் பயங்கர சத்தத்துடன் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்ததாக கிராம மக்கள் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

The post நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து: விமானி, மெக்சிகோவை சேர்ந்த 5 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Nepal ,Mexico ,Kathmond ,Dinakaran ,
× RELATED மெக்சிகோ அதிபர் தேர்தலில் முதல்முறையாக பெண் வெற்றி