×

அம்ரித் நோனியின் விளம்பர தூதராக சூர்யகுமார் நியமனம்

சென்னை: வலி நிவாரணி மருந்து தயாரிக்கும் அம்ரித் நோனியின் விளம்பரத் தூதராக கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அம்ரித் நோனி நிறுவனம், ஆயுர்வேத முறையில் வலி நிவாரணி மருந்துகளை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது. இந்த வலி நிவாரணி மருந்தினை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் இதன் விளம்பரத் தூதராக கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறந்த பேட்ஸ்மேனாக திகழும் சூர்யகுமார், ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். 360 டிகிரியிலும் அதாவது, எல்லா திசையிலும் பந்தை சிதறடிக்கும் அதிரடி பேட்ஸ்மேன் மேனான சூர்யகுமார் கூறுகையில், ‘‘அம்ரித் நோனியுடன் விளம்பர தூதராக இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மருந்து 360 டிகிரி திறனுடன் உடலின் எந்த பாகத்தில் ஏற்படும் வலியையும் போக்கும் தன்மை கொண்டது, என்றார்.

The post அம்ரித் நோனியின் விளம்பர தூதராக சூர்யகுமார் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Suryakumar ,Amrit Noni ,Chennai ,Suryakumar Yadav ,Amrit ,Dinakaran ,
× RELATED சூர்யகுமார், இஷான் கிசான் அதிரடி ஆட்டம்; பெங்களூருவை வீழ்த்தியது மும்பை